Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 44

$
0
0
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 44


1.   தலைவருக்கு எதையும் சுத்தி வளைச்சு பேசறாரே ஏன்?
ஊர் முழுக்க நிறைய நிலத்தை சுத்திவளைச்சி போட்டிருக்கார் இல்லையா அதான்!

2.   அந்த டாக்டர் போலின்னு எப்படி கண்டுபிடிச்சே?
ப்ளாஸ்டிக் சர்ஜரி பண்ண 3 கிலோ பிளாஸ்டிக் வேணும் வாங்கிட்டு வாங்கன்னு சொன்னாரே!

3.   அந்த ஆபீஸ்ல எல்லாத்துக்கும் கவர் கொடுத்தாத்தான் வேலையே நடக்குமாம்!
ஓ!.. அது ‘கவர்’மெண்ட் ஆபிஸா!

4.   தலைவர் எதுக்கு திடீர்னு டாஸ்மாக்கை மூடனும்னு அறிக்கை விடறார்?
அப்பவாவது மக்கள் கிட்ட பாஸ்மார்க் வாங்கமாட்டோமான்னு ஒரு நப்பாசைதான்!

5.   எதிரி மன்னன் மன்னரின் இருப்பிடத்தை எப்படி கண்டுபிடித்தானாம்!
நம் மன்னர் செல்பி எடுத்து எஃபி யிலே போட்டாராமே அதை வைச்சுதான்!

6.   அது கவர்ச்சி நடிகையோட வீடுன்னு எப்படி சொல்றீங்க!
எந்த நேரமும் திறந்தே போட்டிருக்கே!

7.   டாக்டர் அந்த பேஷண்ட்டுக்கு பார்வை சரியில்லை!
கிட்ட பார்வையா? தூரப்பார்வையா?
நான் சொல்லவந்தது கெட்டப்பார்வையை!


8.   கொட்டற மழையில தலைவர் நனைஞ்சிகிட்டே பேசினதும் பிடிச்சிருக்கணுமே!
ஆஹா! தலைவருக்கு ஜலதோஷம் பிடிச்சதுதான் மிச்சம்!

9.   புலவர் ஏன் இவ்வளவு கோபமாக செல்கிறார்?
வீட்டில் அடுப்பே பற்றவைக்கவில்லை என்று சொன்னதும் மன்னர் தீப்பெட்டி நமத்துவிட்டதா? இந்தாருங்கள் புது தீப்பெட்டி என்று கொடுத்தாராம்!

10.என்னங்க இது கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணு வாந்தி எடுக்குது?
நீங்கதானே சொன்னீங்க வெறும் வயித்தோட வரக்கூடாதுன்னு பொண்ணு இப்ப மூணு மாசம்!

11.மன்னர் காலாட்படை வீரர்களுடன் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுகிறாரே என்ன விஷயம்?
கூடிய சீக்கிரம் போர்வருகிறதாம்! ஓடிவர பயிற்சி எடுக்கிறார்!

12.சாதாரண ஜுரம்னு சொன்ன நீங்க எதுக்கு என்னை எமர்ஜென்ஸி வார்டுல அட்மிட் பண்றீங்க டாக்டர்?
எமர்ஜென்ஸியா எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுதே!

13.ஒவ்வொரு ஃபைல்லேயும் வீல் பொருத்துங்கன்னு எதுக்கு மானேஜர் ஆர்டர் போடறாரு?
நம்ம ஆபிஸ்ல ஃபைல்ஸ் வேகமா நகரமாட்டேங்குதுன்னு யாரோ புகார் சொல்லிட்டாங்களாம்!


14.தங்கத்தை சேர்த்துக்கலாம்னு சொன்னா உன் மனைவி ஒப்புக்க மாட்டேங்கிறாங்களா ஆச்சர்யமா இருக்கே!
தங்கம் எங்க வீட்டு வேலைக்காரி ஆச்சே!

15.அவர் குடும்பத்துக்காக ஓடி ஓடி சம்பாரிச்சவருன்னு சொல்றீங்களே என்ன வேலை பார்த்தாரு?
ஃபைனான்ஸ் கம்பெனி நடத்திட்டு இருந்தாரு!

16.காதலிக்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம்?
காதலியை காக்க வைச்சா கிப்ட் வாங்கிட்ட போக ரெடியா இருக்கணும்! பொண்டாட்டியை காக்கவைச்சா உதை வாங்க ரெடியா இருக்கணும்!

17.எவ்வளவு தைரியம் இருந்தால் பட்டப்பகலில் கொள்ளையடித்து இருப்பாய்?
ராத்திரியிலே நாய் தொந்தரவு அதிகமா இருக்கு எசமான்!

18.கஷ்டப்பட்டு கொள்ளையடிச்சும் இப்படி கவுத்துரும்னு எதிர்பார்க்கலைன்னு கபாலி புலம்பறானே ஏன்?
தங்கம் விலை திடீர்னு இப்படி குறையும்னு எதிர்பார்க்கவே இல்லையாம்!

19.நீங்க என்னை பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கே எனக்கு தெரிஞ்சு போயிருச்சு!
  என்ன…. என்ன..?
வசமா ஒரு அடிமை சிக்கிட்டான்னு!

20. மன்னர் எதற்கு புலவரை பாதாளச்சிறையில் அடைக்கின்றார்!
புலவரின் இதயச்சிறையில் இளவரசியார் குடியிருப்பதாக கூறினாராம்!


21.நொண்டிச்சாக்கெல்லாம் சொல்லி லீவ் கேட்க கூடாதுன்னு மேனேஜர் சொல்லிட்டார்!
அதுக்காக கால் உடைஞ்சி போயிருக்கிற எனக்கு லீவு கொடுக்க மாட்டேங்கிறது ரொம்ப அநியாயம் சார்!

22.நம் மன்னருக்கு கிறுக்கு பிடித்த விஷயம் வெளியில் தெரிந்து விட்டது போலிருக்கிறது!
எப்படி சொல்கிறாய்?
கட்டியம் சொல்பவன் மன்னர் வருகிறார் பராக்! பராக்! என்பதற்கு பதில் கிராக்! கிராக்! என்று சொல்கிறானே!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!