புகைப்பட ஹைக்கூ 68
விலங்கை
உடைத்தது
விலங்கு!
விளங்கவில்லை!
விலங்கின்
பாசம்!
சுமையான மந்தி!
சுகமான
தா(நா)ய்!
வேற்றுமை
விலக்கியது
விலங்குகள்!
முதுகில் சுமையல்ல!
புது உறவின்
முகவரி!
பிள்ளைகள் வேறுபட்டாலும்
வேறுபடுவதில்லை!
தாய்!
பிடி இறுகியதும்
பிணைந்தது
நட்பு!
தாய் கைவிட்டாலும்
விடவில்லை!
நாய்!
ஆவிவந்த உறவல்ல!
தாவிவந்த
நட்பு!
இறுகியதும்
உறுகியது
பாசம்!
உழைப்பவன் முதுகில்
உல்லாச
சவாரி!
தாவியதும் கிடைத்தது
வாகனம்!
நாய்!
பெறாமலே
சுமந்தது
நாய்!
ஓரறிவு குறைந்தது
ஒருபடி முன்னெறியது!
தாயான நாய்!
உப்பு மூட்டை தூக்கியது
தப்பு செய்யாத
நாய்!
கட்சித்தாவல்!
காட்சியானது
நாய்!
உடன் பிறக்காவிடினும்
கடன் பட்டது!
குரங்கு!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!