ஜோக்ஸ்!
1. பையனுக்கு ஒரு கால்கட்டுப் போடுவோமுன்னு கல்யாணத்தை பண்ணி வச்சது தப்பா போச்சு!
ஏன்?
வந்த மருமக கட்டவிழ்த்துகிட்டு ஆடறா!
2. தலைவருக்கு உலக அறிவு கம்மியா இருக்கா ஏன்?
ஏதோ பேஸ்புக்கு பேஸ்புக்குன்னு சொல்றாங்களே! அதை ஒரு நாலஞ்சு வாங்கி நம்ம கட்சி ஆபிஸ்ல போடுய்யா வர்றவங்க படிப்பாங்கன்னு சொல்றாரே!
3. மன்னர் நகர்வலம் போவதற்கு ராணியார் தடைவிதித்து விட்டாரா? ஏன்?
நகர் வலத்தின் போது ரகசியமாக ராஜா சைட் அடிக்கிற விசயத்தை யாரோ ராணியிடம் போட்டுக் கொடுத்துவிட்டார்களாம்!
4. தலைவர் ஏன் கூட்டத்துக்கு வாளோடு வரும்படி அழைப்பு விடுத்து இருக்கார்?
அது கட்சி செயல்‘வீரர்கள்’ கூட்டமாம்!
5. உண்ணாவிரதத்துக்கு போன தலைவர் ஏன் பாதியில திரும்பிட்டார்?
அவங்க கொடுத்த ஓட்டல் பிரியாணி சுவையா இல்லையாம்!
6. அந்த பவுலர் பேட்ஸ்மேனைப்பத்தி கேப்டன்கிட்ட என்னமோ சொல்றாரே?
எவ்ளோ மோசமா பந்து போட்டாலும் அடிக்கவே மாட்டேங்கிறான் இவன் ரொம்ப நல்லவண்டா!ன்னு சொல்றாராம்!
7. மன்னா! போர் என்றதும் நம் வீரர்கள்…
சபாஷ்! உடனடியாக புயலென புறப்பட்டு விட்டார்களா?
புறப்பட்டது போருக்கு இல்லை மன்னா! ஊருக்கு!
8. தலைவர் கூட ஒரு கறுப்பு பூனையைக் கொண்டுவர்றாரே ஏன்?
அவருக்கு கறுப்பு பூனை பாதுகாப்பு தரமாட்டேன்னு சொல்லிட்டாங்களாம் அதான் சொந்தமா ஒரு கறுப்பு பூனையோட வர்றார்!
9. மன்னருக்கு உடம்பெல்லாம் நிறைய காயங்கள் இருக்கின்றனவே! போரில் பெற்றதா?
போரில் தோற்று ஓடிவரும் போது தடுக்கிவிழுந்து பெற்றது!
10. மன்னர் இப்போதெல்லாம் பொற்கிழி தருவது இல்லையே ஏன்?
அரண்மனையில் கடும் சில்லறை தட்டுப்பாடாம்! அதான் பொற்கிழிக்கு பதில் பொன் ஓலை தந்துவிடுகிறார்!
11. படிக்க லோன் தர்றாங்கன்னு பேங்க்ல போய் கேட்டா இல்லைன்னுட்டாங்க!
என்ன படிக்க போறீங்க?
குமுதம், விகடன் தான்!
12. பேங்க்ல நகை கடன் கேட்டதுக்கு அடிச்சு விரட்டிட்டாங்களா? ஏன்?
அஞ்சு சவரன் நகை கடனா கேட்டேன்!
13. டி.வி காம்பியரை லவ் பண்றது தப்பா போச்சு!
ஏன்?
அடிக்கடி ப்ரேக் விட்டுட்டே இருக்கா!
14. டாக்டர்! நீங்க ஆபரேஷன் பண்ண இருந்த பேஷண்ட் தப்பி ஓடிட்டார்!
பிழைச்சிட்டு போகட்டும் விட்டுடு!
15. வேலைக்காரி புதுசா கண்டீசன் போடுறாளா? என்ன கண்டீஷன்?
அவ பேஸ்புக்ல போடுற ஸ்டேட்ஸுக்குள்ளாம் லைக்கும் கமெண்ட்டும் போடனுமாம்!
16. டாக்டர் கிட்ட தலைவர் என்ன தகறாரு பண்ணிகிட்டு இருக்கார்?
தேர்தல் ஜுரத்துக்கு மாத்திரை தாங்கன்னு கேட்டு கலாட்டா பண்ணிகிட்டு இருக்கார்!
17. அந்த ஆஸ்பிடலில் அட்மிஷன் கிடைக்கிறது ரொம்ப கஷ்டமாமே?
ஆமாம்! எண்டரன்ஸ் எக்ஸாம்ல பாஸ் பண்ணாத்தான் பெட் கிடைக்கும்!
18. உன் ப்ரெண்ட் ஒரு பொண்ணை விரட்டி விரட்டி காதலிச்சிட்டிருந்தானே இப்ப எப்படி இருக்கான்?
அந்த பொண்ணு அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு இப்ப விரட்டி விரட்டி அடிக்கிறா!
19. அவர் கல்யாண மண்டபத்துல இருந்து வர்றாருன்னு எப்படி சொல்றே?
போகும்போது வெறும் காலோட போனவர் இப்ப செருப்பு காலொட வர்றாரே!
20. புலவர் ஏன் வருத்தமாய் இருக்கிறார்?
இவர் பாடுவதற்கு முன்பே அரசர் பஞ்சப்பாட்டு பாடிவிட்டாராம்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!